புகையிலை,மதுசார பாவனை மற்றும் குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்களின் செல்வாக்கைக் குறைப்பதற்கு சமூக மட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு

Agenda Oral Presentation Poster Presentation Abstract Book Symposium Photo Gallery

புகையிலை மற்றும் மதுசார பாவனையைக் குறைப்பதற்காகவும் நிறுவனங்களின் செல்வாக்கை குறைப்பதற்கும் சமூகமட்டத்திலான நடவடிக்கைகளை மேற்கொண்டோரை அடையாளப் படுத்துவதற்கும் ஏனைய செயற்படுத்துவோரின் மத்தியில் தமது செயற்பாடுகளை பரிமாறிக் கொள்வதற்காகவும் இம்மாநாடு நடாத்தப்பட்டது. கடந்த 19 செப்டெம்பர் 2017 அன்று, கொழும்புப் பல்கலைக்கழகம் மருத்துவப்பீடத்தின் புதிய கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீடம், புகையிலை தொழில்துறை அவதான மையம் (CCT) மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) ஆகியன இணைந்து நடாத்திய மாநாடாகும்.

அனைத்து மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந் நிகழ்ச்சிதிட்டம் இடம்பெற்றது. 06 தலைப்புகளிற்கு கீழ்; 82 தெரிவு செய்யப்பட்ட செயற்றிட்டங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட செயற்றிட்டங்கள் செயற்படுத்தியோரால் விளக்கமளிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செயற்திட்ட சுருக்கங்களும் உள்ளடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அனைத்து எழுத்தாளர்களுக்குமான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொகுப்பாளர்கள் தமக்கு பரீட்சயமான மொழியில் தமது செயற்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

கீழ் காணும் தலைப்புக்களிற்கு இணங்க தொகுப்பாளர்கள் தமது செயற்திட்டங்களை முன்வைத்தனர். :

  • புகையிலை உட்பட மதுசார கட்டுப்பாட்டிற்கு சமூகத்;தை வலுவூட்டல் – நிலையான போதைப் பொருள் தடுப்பு செயற்திட்டம்
  • புகையிலை மற்றும் மதுசார உற்பத்தி நிறுவனங்களின் தலையீடுகளை அறிந்து கொண்டமையும் அதற்கெதிரான பிரதிபலிப்புக்களை வழங்கியமையும்
  • புகையிலை மற்றும் மதுசார பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான செயற்திட்டங்கள்
  • புகையிலை மற்றும் மதுசார பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்தல் – குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்தல்,வறுமையைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தல்,பெண்களை வலுப்படுத்தல்,வன்முறைகளைக் குறைத்தல்,பிள்ளைகளுக்கு ரம்யமான சூழலை உருவாக்குதல்
  • புகையிலை மற்றும் மதுசாரம் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியை குறைப்பதற்கு சமூக மட்டத்தில் மேற்கொண்ட செயற்திட்டம்

குறிப்பிட்ட மாநாட்டிற்கான பிரதான அதிதியாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் பாலித அபயகோன் அவர்கள் கலந்துகொண்டதோடு அவரின் பிரதான உரையும் இடம்பெற்றது.

புகையிலை மற்றும் மதுசார பாவனையைக் குறைப்பதற்காக சமூக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான சொற்பொழிவொன்று பேராசிரியர் தியனாத் சமரசிங்க அவர்களால் வழங்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு : www.adicsrilanka.org/communitysymposium2017

தொலைபேசி : 0112 584416